ஐஒசி எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் – அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

லங்கா ஐஒசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லங்கா ஐஒசி நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு, லங்கா ஐஒசி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, எரிபொருளில் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது என அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *