பாடசாலை மாணவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 12 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவியருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையம் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *