மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?

மாகாணங்களுக்கு இடையில் 21ம் திகதிக்கு பின்னர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், வழமை போன்று பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

21ம் திகதிக்கு பின்னர், மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் பட்சத்தில், விசேட அனுமதியை பெற்று பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *