முல்லைத்தீவு வட்டுவாகலில் பதற்றம்

முல்லைத்தீவு – வட்டுவாகலில் உள்ள கடற்படை முகாமிற்கான காணிகளை சுவீகரிக்க கடற்படையால் எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் காணி உரிமையாளர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றுதிரண்டு தடுத்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் நில அளவை மேற்கொள்ள வந்த அதிகாரிகளைக் காணி உரிமையாளர்கள் உட்படக் குழுமியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாகனத்திற்குக் குறுக்கே நின்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வராசா கஜேந்திரன், வினோநோகராத லிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *