யாழில் இராணுவச் சிப்பாய ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் – நாவற்குழி – தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தற்கொலை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *