விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட அறைகூவல்

நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும், தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து அனைத்து கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாகவும் விவசாயிகள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வடக்கிலும், கிழக்கிலும் பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமிநாசினி அத்தியாவசியமாக தேவைப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாரளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்திலும் நாளையதினம் காலை 9.00 மணிக்கு வவுனியா மாவட்ட அனைத்து கமநல சேவை நிலையம் முன்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக
வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் அமைப்பாளர் நடராசா கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *