ஹொரவ்பத்தானயில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி

ஹொரவ்பத்தான, ஹொரவெவ பகுதியில் சிறுவன் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வயல்வௌி ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்டர் ஒன்றில் இருந்த சிறுவன் மீதே மரம் முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் ஹொரவ்பத்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துட்டுவெவ பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *